காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு


காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
x

காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

வேலூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு வருகிற 1-ந்தேதி வருகை தருகிறார். அன்று மாலை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மறுநாள் 2-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதனை முன்னிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, துணைமேயர் சுனில்குமார், மாநகராட்சி கவுன்சிலர் அன்பு, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story