11,130 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்அமைச்சர் காந்தி வழங்கினார்


11,130 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்அமைச்சர் காந்தி வழங்கினார்
x

11,130 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்அமைச்சர் காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை,


ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, அரக்கோணம் ஆகிய ஊர்களில் நடந்த விழாவில் 74 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 130 மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவச சைக்கிள்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.

சைக்கிள்கள் வழங்கும் விழா

ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 16 பள்ளிகளைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி பயிலும் 2 ஆயிரத்து 743 மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவச சைக்கிள்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சோளிங்கர்

இதேபோல் சோளிங்கர் தொகுதிக்கு‌ உட்பட்ட 23 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 421 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ-மாணவி களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ''போதைப்பழக்கம் உடல் நலத்திற்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடானது. போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி மாணவ மாணவிகள் முன்னேற வேண்டும்'' என்றார்.

விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் மேரிஷேரின், ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், நகர மன்றத் துணைத்தலைவர் பழனி, உறுப்பினர் அன்பரசு, ஆசிரியர் ரவிச்சந்திரன், தி.மு.க. வழக்கறிஞர் உதயகுமார், வெங்கடாபுரம் ஊராட்சி தலைவர் பாபு என்கின்ற ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆற்காடு

ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 17 பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் பயிலும் 2 ஆயிரத்து 980 மாணவ, மாணவிகளுக்கு ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத்தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், பேரூராட்சி தலைவர் மனோகரன், மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அரக்கோணம்

அரக்கோணம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் 18 பள்ளிகளை சார்ந்த 11,-ம் வகுப்பு படிக்கும் 1,986 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் நகரமன்ற தலைவர் லஷ்மி பாரி, ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா சவுந்தர், நெமிலி பேரூராட்சி தலைவர் வடிவேலு, தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜன், தி.மு.க. நகர செயலாளர் வி.எல்.ஜோதி, மேற்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர், மாவட்ட கல்வி அலுவலர் முனி சுப்புராயன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

4 இடங்களிலும் மொத்தம் 74 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 130 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.


Next Story