மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் அமைச்சர் காந்தி வழங்கினார்


மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் அமைச்சர் காந்தி வழங்கினார்
x

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்கள் குறைதீர்வு நாள்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட வருவாய் துறை தொடர்பானவை, வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வழங்க கோருதல், மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் மற்றும் பொதுநல மனுக்கள் என 328 மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு உடனடியாக தெரிவித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

நல திட்ட உதவிகள்

கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.79 ஆயிரம் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர், 2 பேருக்கு முதியோர் ஓய்வூதிய தொகை பெறுவதற்கான ஆணை, ஒரு பயனாளிக்கு முதல்-அமைச்சரின் விபத்து நிவாரண நிதி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

இதில் ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, துணை கலெக்டர் சத்தியபிரசாத்‌, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story