தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.


தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வு

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான திருப்பணிகள் நடந்து வருகிறது. இதில் கோவில் சன்னதிகள், கொடிமரம், கல்மண்டபம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் ருக்மணி, வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சங்கரராமேசுவரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

ஓராண்டில்..

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவில் திருப்பணிகள் உபயதாரர்கள் நிதியுதவியுடன் நடந்து வருகிறது. இதில் 63 தூண்களுடன் கூடிய கல் மண்டபம், சீதேவி, பூதேவி, ஆண்டாள், ஆஞ்சநேயர் சன்னதிகள் புதுப்பிக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் அனுமதியோடு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் 63 கல்தூண்களில் பாதிக்கு மேல் நிலை நிறுத்தப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடிக்கப்படும்.

தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் ஒருசிலர் தேவையற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் மதவெறியைத்தான் எதிர்க்கிறோம். அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் மதிக்கும் கட்சியாக என்றும் தி.மு.க உள்ளது என்று கூறினார்.


Next Story