கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்
x

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி கே சேகர்பாபு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கன்னியாகுமரி:

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்த அவருக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு அம்மனை தரிசனம் செய்தார். மேலும் கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி தியாக சௌந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பாலசௌந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

அதன் பிறகு கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தார். அவருடன் இந்து சமய அறநிலை ஆட்சித் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.Next Story