உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு
உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு
திருப்பூர்
தளி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளது. இங்கு வசித்து வருகின்ற குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக அமராவதி மற்றும் திருமூர்த்தி நகர் பகுதியில் உண்டு உறைவிட பள்ளி கட்டப்பட்டு உள்ளது. இந்த பள்ளிகளில் நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் போது உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை ஒன்றிய செயலாளர்கள் செழியன், செந்தில்குமார், எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story