மேல்நிலை நீர் தொட்டியை அமைச்சர் நேரில் ஆய்வு


மேல்நிலை நீர் தொட்டியை அமைச்சர் நேரில் ஆய்வு
x

மேல்நிலை நீர் தொட்டியை அமைச்சர் நேரில் ஆய்வு

திருப்பூர்

வெள்ளகோவில்


அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் காடையூரான்வலசு மேல்நிலை நீர் தொட்டியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட காடையூரான்வலசு பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக மேல்நிலை நீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டப்பட்டு வரும் புதிய மேல்நிலை நீர் தொட்டியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேரில் சென்று நேற்று ஆய்வுகள் மேற்கொண்டார். காடையூரான்வலசு பகுதியில் சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில் சுமார் 3லட்சம் கொள்ளலவு கொண்ட மேல்நிலை நீர் தொட்டியானது அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானம் மற்றும் வேலை முடிவுகள் குறித்து அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வெள்ளகோவில் நகர்மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார், வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் எஸ். வெங்கடேஸ்வரன்,நகராட்சி பொறியாளர் ம.திலீபன் ஆகியோருடன் ஆலோசித்தார்.மேலும் இந்த ஆய்வில் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story