பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது அமைச்சர் பேட்டி


பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது அமைச்சர் பேட்டி
x

பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி தெரிவித்தார்.

திருச்சி,

தமிழகத்தில் நடப்பாண்டு அரசுப் பள்ளியில் இதுவரை சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை இருந்தது. இந்த வருடம் அந்த இலக்கை அடையும் சூழல் உள்ளது.

பள்ளி கட்டிடங்கள்

பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சொல்லி இருக்கிறோம்.

வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்குள் இந்த பள்ளிக்கூடங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story