ரூ.9,600 கோடியில் நிறைவேறும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அறிக்கை தயாரிக்கும் பணி அமைச்சர் கே.என்.நேரு தகவல்
ிருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ.9,600 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது எனவும் அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது எனவும் திருவண்ணாமலையில் நடந்த 3 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ.9,600 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது எனவும் அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது எனவும் திருவண்ணாமலையில் நடந்த 3 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் தலைமை தாங்கினர். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, பேரூராட்சி ஆணையர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வரவேற்றார்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 3 மாவட்டங்களை சேர்ந்த 10 பேரூராட்சி தலைவர்கள், 9 நகராட்சியின் நகரமன்றத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் கால்வாய், வணிக வளாகம், பஸ் நிலையம், புதிய அலுவலக கட்டிடம், நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். மேலும் அவர்கள் கோரிக்கைகளை மனுவாகவும் அளித்தனர்.கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
காவிரி கூட்டு குடிநீர் திட்டம்
இந்த கூட்டம் முதல்- அமைச்சரின் அனுமதியை பெற்று கூட்டப்பட்டு உள்ளது. இதில் நகரமன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர். அவை அனைத்தையும் துறையில் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கேட்டு கொண்டதன் பேரில் முதல்- அமைச்சர் ரூ.9 ஆயிரத்து 600 கோடிக்கு திட்டம் தந்து உள்ளார். விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகின்றது. திட்ட அறிக்கை முடிந்த பின்னர் அந்த பணிக்கு டெண்டர் விடப்படும்.
மழை காலங்கள் வருவதால் ஏற்கனவே உள்ள கால்வாய்களை தூர்வாரி வைத்து கொள்ள வேண்டும். புதிய இடங்களில் கால்வாய்கள் ேதாண்டப்படுமானால் விரைந்து பணிகளை முடிக்க அனைத்து ஆணையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
புதிய பஸ் நிலையம்
திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.30 கோடியில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. மேலும் தற்போது உள்ள பஸ் நிலையத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றி தரப்படும்.
பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள வரி பிரச்சினை குறித்து துறை அலுவலர்களிடம் கலெக்டர் கலந்து பேசி சரி செய்து கொள்ளலாம். நகராட்சி துறையில் கடைகளுக்கு 10, 15 ஆண்டுகள் வாடகை கூட்டாத காரணத்தினால் ஒரே நேரத்தில் 50 சதவீதம், 75 சதவீதம், 100 சதவீதம் என்று கூட்ட வேண்டிய நிலை வந்து உள்ளது. இதனை 3 வருடத்திற்கு ஒரு முறை பரிசீலனை செய்து வந்தால் எந்தவித பிரச்சினையும் இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின் திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் அமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்