தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்-அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேச்சு


தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்-அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேச்சு
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிைறவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

சிவகங்கை

தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிைறவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

2 ஆண்டுகள் நிறைவு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதனை சிறப்பிக்கின்ற வகையில், சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையிலும், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் முன்னிலையிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று, 2 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கான பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, அனைத்து வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதிநிலை நெருக்கடியினை சமாளித்து, அதனை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதிதாகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.

முன்மாதிரி மாவட்டம்

தேர்தல் காலங்களில் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில், கடந்த 2 ஆண்டுகளில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமன்றி, புதிதாகவும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களை சார்ந்த உறுப்பினர்கள் பெற்ற கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, ரூ.513 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதன்மூலம் 13,12,717 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

1,17,617 மகளிர் சுயஉதவி குழுக்கள் பயன்பெறுகின்ற வகையில், ரூ.2,755 கோடி வழங்கப்பட்டு, இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 16,08,614 விவசாயிகள் பெற்ற மொத்தம் ரூ.12,110 கோடி மதிப்பீட்டில் விவசாய கடனையும் தள்ளுபடி செய்து, அதனையும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிைறவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெற செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பிற மாவட்டங்களுக்கும் முன்மாதிரியான மாவட்டமாக சிவகங்கை திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 365 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 93 ஆயிரத்து 372 மதிப்பீட்டில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜூனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, துணை இயக்குனர்கள் அழகுமலை (தோட்டக்கலைத்துறை), பன்னீர்செல்வம் (வேளாண்மைத்துறை), மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் மணிமுத்து, சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய சாந்தாராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story