திருவரங்குளம் ஒன்றியத்தில் ரூ.11¾ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி-அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்


திருவரங்குளம் ஒன்றியத்தில் ரூ.11¾ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி-அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
x

திருவரங்குளம் ஒன்றியத்தில் ரூ.11¾ கோடியில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்தில் தமிழக முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 12 ஊராட்சிகளுக்கு சாலை அமைக்கும் பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, ஆலங்குடி தாசில்தார் விசுவநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். திருவரங்குளம் ஒன்றியகுழு தலைவர் வள்ளியம்மை மற்றும் ஆணையர் ஆயிஷாராணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து, மேலாத்தூர் ஊராட்சியில் மேலாத்தூர் முதல் சிக்கப்பட்டி வரை சாலை மேம்பாடு செய்தல், கல்லாலங்குடி ஊராட்சியில் நாயக்கர் சாலை சீரமைக்கும் பணி, கரும்பிரான்கோட்டை ஊராட்சியில் பள்ளத்திவிடுதி முதல் கரும்பிரான்கோட்டை வரை இணைப்பு சாலை சீரமைப்பு மற்றும் கீழ கரும்பிரான்கோட்டை பி.ஜி. சாலை மேலகரும்பிரான் கோட்டை பிள்ளையார் கோவில் ஊரணி தார் சாலை சீரமைத்தல், பாத்தம்பட்டி ஊராட்சி முதல் தெற்கு பாத்தம்பட்டி சோம்பியான் குடியிருப்பு சாலை சீரமைத்தல், குப்பகுடி- ஏடி காலனி முதல் பாத்தம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் வழியாக பூமன்கொல்லை சாலை வரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆயிப்பட்டி பயணியர் நிழற்குடை பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

இதேபோல் சேந்தாகுடி ஊராட்சி கீழையூர் புதுக்காடு முதல் பெரமர் கோயில் சாலை மற்றும் பாலையூர் ஊராட்சி அரிமளம் முதல் கலிங்கிப்பட்டி சாலை மற்றும் பாலன் நகர் ஏ.டி.காலனி வரை சாலை அமைக்கும் பணிகள், எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில் இடையர் நத்தம் உள்ள பகுதியில் ஒத்தக்குடிப்பட்டி சாலை, களங்குடி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர் பழனிச்சாமி, நளினி பாரதிராஜா, செல்வராஜ சோழன், சுந்தரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினவேல், ஆலங்குடி கிராம நிர்வாக அலுவலர் உலகநாதன், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story