கோமல் அரசு பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு


கோமல் அரசு பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே கோமல் அரசு பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே கோமல் அரசு பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

மதிய உணவு திட்டம்

குத்தாலம் அருகே கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் தினசரி மதிய உணவு சாப்பிடும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 236 மாணவர்கள் மற்றும் 207 மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

மேலும் சமையலறையில் மதிய உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளின் தரம் குறித்தும் பார்வையிட்டார். மாணவர்களின் வருகை மற்றும் தினசரி மதிய உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

அடிப்படை வசதிகள்

மேலும் மாணவர்களின் வகுப்பறைகளின் எண்ணிக்கைகள், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, பூம்புகார் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வினோத்குமார், திவ்யாசரண்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி பாலு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராகவன், தலைமை ஆசிரியர் பாஸ்கர், 2-வது வார்டு உறுப்பினர் கார்டிலியா மில்லர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகுதி நேர ரேஷன்கடை

தொடர்ந்து திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு சென்ற அமைச்சர் மெய்யநாதனிடம், திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளம் தமிழ்ச்செல்வன், துணைத்தலைவர் கலைவாணி ரமணிச்சந்திரன், வார்டு உறுப்பினர் முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து, வழுதலைக்குடி கிராமத்தில் பகுதி நேர ரேஷன்கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், உரிய விசாரணை செய்து வழுதலைக்குடி கிராமத்தில் புதிய பகுதிநேர ரேஷன்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் அர்ச்சனா, கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story