தருமபுர ஆதீனத்தை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன்


தருமபுர ஆதீனத்தை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன்
x

தருமபுர ஆதீனத்தை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சந்தித்து உள்ளார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடாலயத்தில் சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று 27-வது குருமகாசந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் மெய்யநாதனிடம் நிருபர்கள் கேட்டபோது,

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் புதிய பஸ் நிலையம் அமைய இடம் வழங்கிய தருமபுர ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றார்.

அப்போது நிவேதா முருகன் எம்.எல்.ஏ., நகரசபைத் தலைவர் செல்வராஜ், அரசு வழக்கறிஞர் சேயோன், திமுக நிர்வாகிகள் ஞானவேலன், இமயநாதன், ரவி, ஸ்ரீதர் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story