பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறிய அமைச்சர் ராஜகண்ணப்பன்


பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறிய அமைச்சர் ராஜகண்ணப்பன்
x
தினத்தந்தி 17 Sep 2022 6:45 PM GMT (Updated: 17 Sep 2022 6:45 PM GMT)

பரமக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் காலை உணவை பரிமாறினார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் காலை உணவை பரிமாறினார்.

காலை உணவை பரிமாறினார்

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பரமக்குடி நகராட்சி பகுதியில் உள்ள 7 தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 995 மாணவ- மாணவிகளுக்கு தினமும் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் அனைவரையும் வரவேற்றார்.

நகராட்சிக்குட்பட்ட சிவானந்தபுரத்தில் ரூ.23.80 லட்சம் மதிப்பீட்டில் காலை உணவு தயாரிப்பதற்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து சிற்றுண்டி எடுத்துச் செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்பு சிவானந்தபுரம் பள்ளியில் பயிலும் மாணவி - மாணவிகளுக்கு அமைச்சர் காலை சிற்றுண்டி தானே பரிமாறினார். பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு தனது கையால் உணவு ஊட்டினார்.அப்போது மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் குணா, மாநில தீர்மானக்குழு துணை தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வக்கீல் சங்க தலைவர் கந்தசாமி, நகர் இளைஞர் அணி அமைப்பாளர் சன்.சம்பத்குமார், நகர் மாணவரணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமு யாதவ், முதுகுளத்தூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் அருண் பிரசாத், கோவிந்தம்மாள், நகர் துணைச் செயலாளர் மும்மூர்த்தி நிர்வாகிகள் அந்தோணி தாஸ், உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பரமக்குடி நகராட்சி மேலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story