செம்பட்டியில் அரசு கூட்டுறவு கல்லூரி விரைவில் தொடங்கப்படும்; அமைச்சர் இ.பெரியசாமி தகவல்


செம்பட்டியில் அரசு கூட்டுறவு கல்லூரி விரைவில் தொடங்கப்படும்; அமைச்சர் இ.பெரியசாமி தகவல்
x

செம்பட்டியில் அரசு கூட்டுறவு கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்

செம்பட்டியில் அரசு கூட்டுறவு கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

கடனுதவி வழங்கும் விழா

நிலக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் வரவேற்றார். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், முதன்மை நிர்வாகி அன்புக்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். அவரது அறிவுறுத்தலின்பேரில் திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் விதமாக பல்வேறு வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விவசாயிகளுக்கு தேவையான கடனுதவி வழங்கப்படுகிறது.

அதேபோல் சுயஉதவி குழுக்களுக்கு கடன், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் என்று பல்வேறு வகையில் மக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. செம்பட்டியில் அரசு கூட்டுறவு கல்லூரி விரைவில் ெதாடங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலக்கோட்டை தாலுகாவில் மட்டும் சமீபத்தில் 20 இடங்களில் புதிய ரேஷன் கடை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

இந்த விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், நிலக்கோட்டை நகர செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை, நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாஷினிபிரியா கதிரேசன், துணைத்தலைவர் முருகேசன், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், அம்மையநாயக்கனூர் நகர நிர்வாகி விஜய், மத்திய கூட்டுறவு வங்கியின் நிலக்கோட்டை வட்டார கள அலுவலர் அன்பரசன், கூட்டுறவு மேற்பார்வையாளர் சின்ன சிதம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வத்தலக்குண்டு

இதேபோல் வத்தலக்குண்டுவில் நடந்த விழாவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன், சிறுவணிக கடன், கைம்பெண்கள் மேம்பாட்டு கடன் என ஏராளமான பயனாளிகளுக்கு கடனுதவிகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். இந்த விழாவில் வத்தலக்குண்டு ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன், நகர செயலாளர் சின்னத்துரை, வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், முன்னாள் பேரூராட்சி தலைவர் கனகதுரை, மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்து, ஒன்றிய கவுன்சிலர் விஜயகர், ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story