கோவையில் உலகப்பொது இசை பறை மாநாடு - அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்


கோவையில் உலகப்பொது இசை பறை மாநாடு - அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்
x

300-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பறை இசைக் கருவியை வாசித்து அசத்தினர்.

கோவை,

கோவை மாவட்டம் பேரூரில் உள்ள் சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ் கல்லூரியில் உலகப்பொது இசை பறை மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால இசைக் கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இசை பறை மாநாட்டை முன்னிட்டு தமிழ் கல்லூரி வளாகத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 300-க்கும் மேற்பட்ட பறை இசைக் கலைஞர்கள் பறை இசை வாசித்து அசத்தினர். மேலும் இந்த நிகழ்வில் பறை நூல்கள் வெளியீடு, 1330 திருக்குறள் பறைப் படை நிகழ்ச்சி, கருத்தரங்கு நிகழ்ச்சி, நாட்டார் கலை நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.



Next Story