அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை வரவேற்று பட்டாசு வெடிக்க முயன்ற 4 பேர் கைது
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை வரவேற்று பட்டாசு வெடிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை வரவேற்று நேற்று காலை தேனி மாவட்டத்தை சேர்ந்த அகில இந்திய சட்ட உரிமை கழகத்தை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் ஆனந்த் மற்றும் ஜெயக்குமார், சேகர், செந்தில்குமார் ஆகிய 4 பேர் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் பட்டாசுகளை வெடிக்க முயன்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்து பட்டாசு மற்றும் இனிப்புகளை கைப்பற்றினர். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story