திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் சித்ரா பௌவுர்ணமியையொட்டி வருகிற 4,5-ந்தேதிகளில் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சித்ரா பௌவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் வசதி குறித்து இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். துணை சபாநாயகர் பிச்சாண்டி கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உட்பட பலர் உடனிருந்தனர்.

14 கி.மீ கிரிவலப்பாதையில் தூய்மையான முறையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படுகின்றன. 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


Next Story