சோழவரம் ஒன்றியத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதியில் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு


சோழவரம் ஒன்றியத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதியில் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு
x

சோழவரம் ஒன்றியத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதியில் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

பொன்னேரி,

கொசஸ்தலை ஆற்றின் கரை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது உடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தேவையான முன் எச்சரிக்கை பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு, பாடியநல்லூர், விச்சூர், வெள்ளிவாயல் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கரைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் சா.மு. நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு 20 சென்டி மீட்டர் மழை ஒரே நாளில் பெய்தது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களாக அதிக அளவு மழை பெய்து உள்ளது. முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் குறைவாக உள்ளது.

கொசஸ்தலை ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் வெள்ள நீர் ஊருக்குள் புகாதவாறு தேவையான நடவடிக்கைகள், பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story