தமிழகத்தில் உணவுத்துறையில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
தமிழகத்தில் உணவுத்துறையில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.
தமிழகத்தில் உணவுத்துறையில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, 6 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் முகாமில் அமைச்சர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்காக மக்களாட்சி நடத்தி வருகிறார். இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்பதே அவருடைய லட்சியமாக கொண்டுள்ளார். இதற்காக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒட்டன்சத்திரத்தில் 6 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் பணியிடங்கள்
தமிழகத்தில் உணவுத்துறையில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும். இதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.