அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம்


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம்
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட-மாநில-மாநகர அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கலைஞரின் நூற்றாண்டை இளைஞர் அணி சார்பில் கொண்டாடுவது, இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டு பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணியின் பணிகள் பற்றி இதில் விவாதிக்கப்படுகிறது.


Next Story