அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு வருகை
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஈரோடு வருகிறாா்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஈரோடு வந்து கிழக்கு தொகுதி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.
நலத்திட்ட உதவிகள்
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஈரோடு வருகிறார்.
மாலை 4 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
வாக்காளர்களுக்கு நன்றி
இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியிலும், 5.30 மணிக்கு கருங்கல்பாளையம் காந்திசிலை பகுதியிலும், 6 மணிக்கு மரப்பாலம் அண்ணா டெக்ஸ் மேடு பகுதியிலும் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.