இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!


இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
x
தினத்தந்தி 27 Feb 2023 11:58 AM IST (Updated: 27 Feb 2023 1:20 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார்.

சென்னை,

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றார். பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மேலும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் நேரம் கேட்டிருப்பதாகவும் பிரதமரை சந்திக்க அவருக்கு நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Related Tags :
Next Story