மினி ஒலிம்பியாட் அமைப்பதற்காக அரசு நிலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
அரசு நிலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்,
பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலையத்துக்குட்பட்ட குத்தம்பாக்கம் ஊராட்சியில் அரசு அனாதினம் நிலம் 100 ஏக்கர் உள்ளது. இந்த அரசு நிலத்தில் மினி ஓலிம்பியாட் விளையாட்டு மைதானம் அமைக்க ஏதுவாக இருக்குமா என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மினி ஓலிம்பியாட் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story