காரைக்குடி அருகே அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்பு


காரைக்குடி அருகே அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்  அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Jun 2023 7:00 PM GMT (Updated: 30 Jun 2023 7:17 AM GMT)

காரைக்குடி அருகே அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே கீழாநிலைக்கோட்டையில் உள்ள அரியநாயகி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

அரியநாயகி அம்மன் கோவில்

காரைக்குடி அருகே கீழாநிலைக்கோட்டையில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 25-ந்தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

வேத மந்திரங்களும் வேத பாராயணங்களும் முழங்க பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் 6 கால யாக பூஜைகளை நடத்தினர். பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது..

கும்பாபிஷேகம்

நேற்று காலை 9.15 மணிக்கு யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுக்கள் ஒலிக்க வானில் கருடன் வட்டமிட காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களை தொடர்ந்து மூலஸ்தானத்திலும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.. பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர். டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்பு

விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, திருநாவுக்கரசர் எம்.பி., தொழிலதிபர் செல்லப்பன் அம்பலம், பி.எல்.படிக்காசு அம்பலம், செல்லப்பன் வித்யா மந்திர் தாளாளர் சத்தியன், தொழிலதிபர்கள் பி.எல்.பி. பாலசுப்பிரமணியன், பி.எல்.பி. பெரியசாமி, மாங்குடி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த், பள்ளத்தூர் பேரூராட்சி சேர்மன் சாந்தி சங்கர், சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன், ராஜேஷ்கண்ணன், சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை 84 நாட்டு நாட்டார்கள், அம்பலக்காரர்கள், மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.


Next Story