கோவில்பட்டியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆய்வு செய்தனர்


கோவில்பட்டியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு   ஆய்வு செய்தனர்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவில்பட்டிக்கு வியாழக்கிழமை வருகையை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டனர்.

ரூ.10½ கோடியில் புதிய கட்டிடம் திறப்பு

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடியில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு திறந்து வைக்கிறார்.

பின்னர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி குறைகளை கேட்டறிகிறார்.

அமைச்சர்கள் ஆய்வு

இதையொட்டி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி, தீப்பெட்டி தொழிற்சாலை ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார் சுசீலா, நகரசபை தலைவர் கா.கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் கங்கா பரமேஸ்வரி, பரமசிவம், அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி, டாக்டர் மோசஸ்பால், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், துணைத்தலைவர் கோபால்சாமி, செயலாளர் சேதுரத்தினம், பொருளாளர் தங்கமணி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் ராஜூ, திலகரத்தினம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story