விழுப்புரத்தில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில்    வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்


தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களின் மாறுதல்களில் தொடர்ந்து அரசின் விதிமுறைகள் மீறப்படுவதை உரிய விசாரணை செய்து இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அமைச்சு பணியாளர்களின் மாறுதல் நியமனத்தில் அரசின் விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து முன்னுரிமைப்படி செயல்படுத்தக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் காந்திமதி தலைமை தாங்கினார். செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பார்த்திபன், பொருளாளர் குப்பம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இதில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை, பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறையை சேர்ந்த அமைச்சு பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story