மினிவேன் கவிழ்ந்து பெண் சாவு

போளூர் அருகே மினிவேன் கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
போளூர்
ஜவ்வாதுமலை அடுத்த போங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 44) இவர் போளூர் சென்று பொருட்கள் வாங்குவதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த குப்பன் (25) மினிவேன் சொந்தமாக வைத்துள்ளார். அவரும் வேனை ரிப்பேர் சரி செய்வதற்காக போளூர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த வள்ளியம்மாள், அவரது கணவர் சுப்பிரமணி மற்றும் 10 பேர் வேனில் ஏற்றிக்கொண்டு போளூக்கு சென்று கொண்டிருந்தார்.
போளூரை அடுத்த அத்திமூர் என்ற இடத்தில் துணை மின் நிலையம் அருகில் வந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மினிவேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வள்ளியம்மாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் குப்பன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து போளூர் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வள்ளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






