இலவச தையல் எந்திரம் பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்


இலவச தையல் எந்திரம் பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
x

இலவச தையல் எந்திரம் பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

சிறுபான்மையின மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், சிறுபான்மையினரின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தவும், மின் மோட்டாருடன் கூடிய தையல் எந்திரங்களை இலவசமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட தகுதிகளுக்கு உட்பட்டு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரம் வழங்கப்படவுள்ளது. இதற்கு தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். மேலும் தையல் கலை பயின்றதற்கு உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வருமான ஆண்டு உச்சவரம்பு ரூ.1 லட்சமாக இருக்க வேண்டும். 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு முறை தையல் எந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் எந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அறை எண் 11-ல் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story