2 அடி நீளம் கொண்ட அதிசய பீன்ஸ்

2 அடி நீளம் கொண்ட அதிசய பீன்ஸ்
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் நகருக்கு விவசாயி விற்பனைக்காக கொண்டு வந்திருந்த பீன்ஸ் 2 அடி நீளம் இருந்தது. அதனை வியப்புடன் பார்த்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் நகருக்கு விவசாயி விற்பனைக்காக கொண்டு வந்திருந்த பீன்ஸ் 2 அடி நீளம் இருந்தது. அதனை வியப்புடன் பார்த்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் விவசாயமே பிரதானமாக உள்ளது. இந்த பகுதி விவசாயிகள் கீரை வகைகள், தக்காளி, பீட்ரூட், முருங்கைக்காய், அவரை, பீர்ககன்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை விவசாயி ஒருவர் தனது விளை நிலத்தில் விளைவித்த பீன்ஸ் வகைகளை விற்பனைக்காக செங்கம் நகருக்கு கொண்டு வந்திருந்தார்.

அவர் கொண்டு வந்திருந்த பீன்ஸ் சுமார் 2 அடிக்கு மேல் நீளம் இருந்தது.

இந்த நீளமான பீன்சை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வாங்கி சென்றனர்.

Next Story