கோபி அருகே திருமணமான 3 மாதத்தில் பரிதாபம்: முகத்தை பாலித்தீன் பையால் கட்டிக்கொண்டு வாயில் ஹீலியம் வாயுவை செலுத்தி பெண் என்ஜினீயர் தற்கொலை
கோபி அருகே திருமணமான 3 மாதத்தில் முகத்தை பாலித்தீன் பையால் கட்டிக்கொண்டு வாயில் ஹீலியம் வாயுவை செலுத்தி பெண் என்ஜினீயர் பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவுக்கான மர்மம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தூர்
கோபி அருகே திருமணமான 3 மாதத்தில் முகத்தை பாலித்தீன் பையால் கட்டிக்கொண்டு வாயில் ஹீலியம் வாயுவை செலுத்தி பெண் என்ஜினீயர் பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவுக்கான மர்மம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் என்ஜினீயர்
கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளையத்தை சேர்ந்தவர் திருவேங்கடசாமி. இவருடைய மகள் இந்து (வயது 25) என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இந்துவுக்கும் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு சாரதி (27) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்கள்.
கதவை திறக்கவில்லை
இதற்கிடையே இந்துவின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவரை பார்ப்பதற்காக பொலவக்காளிபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு இந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்குவதற்காக இந்து உள்ளே சென்றார். மாலை 7 மணி ஆன பின்னரும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இந்துவின் பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தார்கள். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார்கள்.
பிணமாக கிடந்தார்
அறைக்குள் சென்று பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார்கள். முகத்தை சுற்றிலும் பாலித்தீன் பையை கட்டிக்கொண்டு, வாய் பகுதியில் ஒரு குழாய் சென்ற நிலையில் இந்து பிணமாக கிடந்தார்.
அதைப்பார்த்து பெற்றோர் அலறி துடித்தார்கள். இதுபற்றி உடனே கோபி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளா தேவி, இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள்.
கொடூர தற்கொலை
பாட்டியை பார்ப்பதற்காக தாய் வீட்டுக்கு வந்த இந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்துள்ளதாக தெரிகிறது. இதற்காக பலூனுக்கு காற்று பிடிக்கும் சிறிய ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் மற்றும் பாலித்தீன் பைகளை தயாராக கொண்டுவந்துள்ளார்.
பின்னர் அறைக்குள் தூங்குவதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு சென்றவர் முகம் முழுவதும் பாலித்தீன் பையை இடைவெளியின்றி சுற்றி கட்டிக்கொண்டு, வாயில் ஹீலியம் வாயுவை செலுத்தி கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதைத்தொடர்ந்து இந்துவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து ஏன் இப்படி கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்டார்? சாவுக்கான மர்மம் என்ன? என்று புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்துவுக்கும், விஷ்ணுசாரதிக்கும் திருமணம் ஆகி 3 மாதங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினியும் மேல் விசாரணை நடத்த உள்ளார்.
திருமணம் ஆன 3 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.