வி.கைகாட்டி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி பலி


வி.கைகாட்டி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி பலி
x

வி.கைகாட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தம்பதி பலியாகினர்.

அரியலூர்

மோட்டார் சைக்கிள் மோதல்

அரியலூர் மாவட்டம் வல்லகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45), விவசாயி. இவரது மனைவி மணிமேகலை (38). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வி.கைகாட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது புதுப்பாளையம் தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டு இருந்தபோது சிறுவளூர் கிழக்கு தெருவை சேர்ந்த இளவரசன் மகன் முத்துகுமார் (29) என்பவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் ரமேஷ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

தம்பதி பலி

இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ், மணிமேகலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முத்துகுமார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த முத்துகுமாரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதையடுத்து, பலியான ரமேஷ், மணிமேகலை உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story