மாயமான 3 மாணவர்கள் சென்னையில் மீட்பு


மாயமான 3 மாணவர்கள் சென்னையில் மீட்பு
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் மாயமான 3 மாணவர்கள் சென்னையில் மீட்பு

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் யாகூப்(வயது 13), அமீர் அலி(13), கையீப்(13) ஆகிய 3 பேரும் திடீரென மாயமானார்கள். இது குறித்து மாணவர்களின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவர்கள் 3 பேரும் உளுந்தூர்பேட்டையில் இருந்து அரசு பஸ்சில் ஏறி வெளியூர் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து 3 மாணவர்களையும் போலீசார் தேடி வந்தனர். அப்போது மாயமான மாணவர்களில் ஒருவரின் உறவினர் வீடு சென்னையில் இருப்பது தொியவந்ததை அடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது உறவினர் வீட்டில் இருந்த 3 மாணவர்களையும் மீ்ட்டு திருநாவலூருக்கு அழைத்து வந்து அவர்களின் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story