தர்மபுரியில் விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவி மாயம்


தர்மபுரியில் விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவி மாயம்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியை சேர்ந்த 17 வயது மாணவி தர்மபுரியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி அண்மையில் தர்மபுரியில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதியில் சேர்ந்தார். அங்கிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகிகள் மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து விடுதி காப்பாளர் கிரேசி நிர்மலா மேரி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.


Next Story