பாலக்கோடு, இண்டூர் பகுதியில் 2 இளம்பெண்கள் மாயம்
தர்மபுரி:
பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேசம்பட்டியை சேர்ந்த சுஜி (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் தர்னிஷ் என்ற மகன் உள்ளான். சுஜி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் சந்தோசுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று சுஜி, அவருடைய தாயாரிடம் செல்போனில் பேசினார். இதனை சந்தோஷ் கண்டித்ததால் அவர் மனமுடைந்தார். இதையடுத்து தனது மகன் தர்னிசுடன், சுஜி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இண்டூர் அருகே உள்ள நடப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (29). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுமித்ரா (22). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 21-ந் தேதி சுமித்ரா, தனது மகனுடன் ஏ.செக்காரப்பட்டிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் இண்டூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.