மருத்துவமனையிலிருந்து மாயமான சிறுமி.. இன்ஸ்டாகிராம் மூலம் கண்டுபிடித்த போலீசார்
உடல் நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, திடீரென காணாமல் போனார்.
சென்னை,
சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த ஒரு சிறுமி உடல் நல குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அந்த சிறுமி திடீரென காணாமல் போனதாக விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த சிறுமி சமூக வலைதள வீடியோக்ள் மூலம் பிரபலமான மற்றொரு பெண்ணுடன் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இருப்பது தெரிய வந்தது. அச்சிறுமியின் இன்ஸ்டிராகிராம் பக்கம் மூலம் இதனை கண்டுபிடித்த போலீசார் அச்சிறுமியை மீட்டு அறிவுரை கூறி தந்தையிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ தயாரிக்க அச்சிறுமி மருத்துவமனையில் இருந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story