தவறவிட்ட பணம், ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்


தவறவிட்ட பணம், ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்
x

கோத்தகிரியில் தவறவிட்ட பணம், ஆவணங்களை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி மார்க்கெட் பகுதியில், கோத்தகிரி போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியம் பணியில் இருந்தார். அப்போது கீழே ஒரு பை கிடந்ததை பார்த்தார். அதை எடுத்து பார்த்த போது, உள்ளே ரூ.3,200, ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, பான் கார்டு, வங்கி புத்தகம் இருந்தது. அதில் கோத்தகிரி ஓரசோலை காமராஜர் நகரை சேர்ந்த சரஸ்வதி என்பவருடையது என தெரியவந்தது. தொடர்ந்து அந்த பை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆதார் அட்டையில் உள்ள முகவரி மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். நேற்று சப்-இன்ஸ்பெக்டர் யாதவ், ஏட்டு பாலசுப்பிரமணியம் ஆகியோர் தவறவிட்ட பை, பணம், ஆவணங்களை சரஸ்வதியிடம் ஒப்படைத்தனர். அந்த பெண் போலீசாரை பாராட்டினார்.


Next Story