கொசஸ்தலை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்


கொசஸ்தலை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
x

கொசஸ்தலை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாக்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர்வு கூட்டம், அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெமிலி மற்றும் அரக்கோணம் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுதானிய பயிர்கள் பயிரிடப்படுகிறது. அதனை விற்பனை செய்வதற்கு இடத்தினை ஏற்படுத்தி தர வேண்டும். பயிர் காப்பீடு செய்யும் தொகை குறைவாக உள்ளது. எனவே, பயிர் காப்பீடு தொகையினை உயர்த்தி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், நெமிலி தாசில்தார் ரவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story