கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
கொல்லை பாசனவாய்க்காலை தூர்வாரி கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஒன்றியம் வடகால் கிராமத்தில் கொல்லை பாசனவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் மூலம் வடகால் பகுதியில் உள்ள 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதன் மூலம் வடகால் கிழக்குத்தெரு, நடுத்தெரு, அரண்மனை தெரு, தெற்கு தெரு பகுதிகளில் உள்ள குளங்கள் தண்ணீர் பெறுகின்றன. தற்போது இந்த வாய்க்காலில் கழிவுநீர் கலந்து சாக்கடை போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வாய்க்காலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத கொல்லை வாய்க்காலை தூர்வாரி, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story