ரூ.160 கோடிக்கு கோரிக்கை விடுத்த எம்எல்ஏ - அதிர்ந்து போன அமைச்சர் மா.சுப்பிரமணியன்


ரூ.160 கோடிக்கு கோரிக்கை விடுத்த எம்எல்ஏ - அதிர்ந்து போன அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.160 கோடியில் கட்டடம் ஒன்றை கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

சென்னை,

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரூ.160 கோடிக்கு கட்டடம் ஒன்று கட்டித்தருமாறு ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மருத்துவமனை நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி திடீரென மருத்துவமனைக்கு ரூ.160 கோடியில் கட்டடம் ஒன்றை கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கை தொடர்பாக பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏவின் கோரிக்கையை கேட்டவுடன் அதிர்ந்து போய் விட்டதாகவும் ரூ.160 கோடிக்கு எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுட்டிகாட்டியது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

1 More update

Next Story