வந்தே பாரத் ெரயிலுக்கு வாணியம்பாடியில் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்பு


வந்தே பாரத் ெரயிலுக்கு வாணியம்பாடியில் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்பு
x

வந்தே பாரத் ெரயிலுக்கு வாணியம்பாடியில் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்பு அளித்தனர்.

திருப்பத்தூர்

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை நேற்று மாலை பிரதமர் மோடி சென்னையில் தொடக்கி வைத்தார். அந்த ரெயில் மாலை 6.45 மணிக்கு வாணியம்பாடி ெரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு எம்.எல்.ஏ.க்கள் வாணியம்பாடி கோ.செந்தில்குமார், ஜோலார்பேட்டை தேவராஜி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வாசுதேவன், மாநில நிர்வாகி வெங்கடேசன் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், ெரயில் நிலைய அதிகாரி பூபதி உடனிருந்தனர்.

வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ஜெயலட்சுமி மற்றும் ெரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story