உணவு தர பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் பகுப்பாய்வு கூட வாகனம்


உணவு தர பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் பகுப்பாய்வு கூட வாகனம்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உணவு தர பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் பகுப்பாய்வு கூட வாகனத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை


உணவு தர பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் பகுப்பாய்வு கூட வாகனத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உணவு தர பரிசோதனை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு தர பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி, வாகனம் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உணவுகளின் தரம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு கலப்படமின்றி தயாரிக்கப்படுகின்றனவா? என்பது குறித்தும், கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களின் தரம் குறித்து நேரில் கண்டறியவும் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உணவு பொருட்களின் தன்மை குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் வாகனத்தின் மூலம், இம்மாதம் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பொது மக்களிடையே உணவு பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பவர்கள், தங்கள் பகுதிகளுக்கு இந்த வாகனம் வரும் சமயத்தில், உணவு பொருட்களில் தங்களுக்கு உண்டான சந்தேகங்களை கேட்டு, சோதித்து தெரிந்துகொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் புஷ்பராஜ், ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் செந்தில்வேல், உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

1 More update

Next Story