'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு மாதிரி தேர்வு


நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு மாதிரி தேர்வு
x

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு மாதிரி தேர்வு நடைபெற்றது.

அரியலூர்

மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் 'நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' தேர்வு எழுத தமிழக அரசின் பள்ளக்கல்வித்துறை மூலம் அந்தந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏற்பாட்டில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி 'நீட்' தேர்வு நடைபெறுவதால், நேற்று அந்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.


Next Story