திருச்சி மன்னார்புரம் சர்வீஸ் ரோட்டில் நவீன கேமராக்கள்
திருச்சி மன்னார்புரம் சர்வீஸ் ரோட்டில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன
திருச்சி
கே.கே.நகர், ஆக.17-
திருச்சி மன்னார்புரம் சர்வீஸ்ரோட்டில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், சந்தேக நபர்களை கண்காணிக்கவும், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்லும் நபர்கள் மற்றும் வாகன பதிவு எண் இல்லாமல் செல்லும் நபர்கள், 3 பேருடன் செல்பவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க 3 உயர் ரக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நேற்று காலை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த அதிநவீன கேமராக்கள் திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் 24 மணிநேரமும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து கொண்டே இருக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story