ரூ.18 லட்சத்தில் நவீன வகுப்பறைகள் தொடக்கம்


ரூ.18 லட்சத்தில் நவீன வகுப்பறைகள் தொடக்கம்
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.18 லட்சத்தில் நவீன வகுப்பறைகள் தொடக்கம்

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே உள்ள ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுமார் 140-க்கும் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ரூ.18 லட்சம் செலவில் 'ஸ்மார்ட் கிளாஸ்'(நவீன வகுப்பறைகள்) கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த திறப்பு விழாவில், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் தலைமை தாங்கி நவீன வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், அனைத்து நகராட்சி பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது நீலகிரி மாவட்டத்தில் ஆர்.கே.புரம் நகராட்சி பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்று நவீன வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

பின்னர் கலை, இலக்கியம், கட்டுரை, ஓவியம், விளையாட்டு, பேச்சு போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பிரமீளா மற்றும் ஆசிரியர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story