நவீன எரிவாயு தகன மேடை-அறிவு சார் மையம் கட்டுமான பணிகள்


நவீன எரிவாயு தகன மேடை-அறிவு சார் மையம் கட்டுமான பணிகள்
x

நவீன எரிவாயு தகன மேடை-அறிவு சார் மையம் கட்டுமான பணிகள்

திருவாரூர்

நன்னிலத்தில் நடந்து வரும் நவீன எரிவாயு தகன மேடை மற்றும் அறிவு சார் மையம் கட்டுமான பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா நேற்றுமுன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நன்னிலத்தில் நடைபெற்று வரும் நவீன எரிவாயு தகன மேடை மற்றும் அறிவு சார் மையம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.

புதிய பஸ்நிலையம்

புதிதாக கட்டப்பட்ட நன்னிலம் பஸ் நிலையத்தை அவர் நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது சென்னை பேரூராட்சிகளின் கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர், திருவாரூர் - நாகப்பட்டினம் மாவட்ட உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story