போலீசாருக்கு மின்விசிறியுடன் கூடிய நவீன நிழற்குடை


போலீசாருக்கு மின்விசிறியுடன் கூடிய நவீன நிழற்குடை
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:46 PM GMT)

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு போலீசாருக்கு மின்விசிறியுடன் கூடிய நவீன நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

கோவையில் கோர்ட்டு, கலெக்டர் அலுவலகம் இருக்கும் ரோட் டில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. இதனால் அந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரு கின்றன.

மேலும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தினமும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து போலீஸ் அதிகாரிகள் வருகின்றனர்.

அந்த வாகனங்கள் கமிஷனர் அலுவலகத்துக்குள் திரும்பும் போது விபத்து ஏதும் ஏற்பட்டு விடாமல் இருக்க போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள், கமிஷனர் அலுவலகத்துக்கு உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் வாகனங்கள் வரும் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்து கின்றனர். இதனால் போக்குவரத்து போலீசார் நீண்ட நேரம் வெயிலில் நின்று பணி செய்யும் நிலை உள்ளது.

இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு நின்று பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்காக மின்விசிறியுடன் கூடிய நவீன நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் அங்கு பணியாற்றும் போலீசார் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து போலீசார் ஒருவர் கூறுகையில்:-

கமிஷனர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அவர் கள் வெயிலில் சோர்வடையாமல் பணியாற்றும் வகையில் மின் விசிறியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்ற விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்றுள்ளது என்றார்.-

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு போலீசாருக்கு மின்விசிறியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.


Next Story