"ராணுவத்தை வைத்து காசை மிச்சப்படுத்தும் மோடி அரசு" - காங்கிரஸ் தேர்தல் அதிகாரி கௌரவ் கோகாய்
அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக்கோரி, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
சென்னை,
அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக்கோரி, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக காங்கிரஸ் தேர்தல் அதிகாரி கௌரவ் கோகாய், அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் திட்டம் என்று கூறினார்.
அதனை திரும்ப பெறக்கோரி இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்து உள்ளதாக கூறினார். தமிழகத்திலும் இன்று இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி இருப்பதாக அவர் கூறினார்.
மக்கள் எதிர்ப்பை மீறி 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு திரும்ப பெறப்பட்டதாகவும், பணமதிப்பிழப்பு பிரச்சனையால்,பொருளாதாரம் சரிந்ததும் மோடி அரசின் சாதனை என்று கூறினார். இப்போது, ராணுவத்தை வைத்து காசை மிச்சப்படுத்த மோடி அரசு நினைப்பதாகவும்,கௌரவ் கோகாய் தெரிவித்தார்.
Related Tags :
Next Story