உணவு திருவிழாவில் வசூலான பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கிய மாணவ, மாணவிகள்


உணவு திருவிழாவில் வசூலான பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கிய மாணவ, மாணவிகள்
x
தினத்தந்தி 22 Oct 2022 11:51 PM IST (Updated: 22 Oct 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

உணவு திருவிழாவில் வசூலான பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாணவ, மாணவிகள் வழங்கினர்.

சிவகங்கை


உலக உணவு நாளை முன்னிட்டு சோழபுரம் ஸ்ரீரமணவிகாஸ் மேல்நிலை பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. விழாவில் 100-க்கும் மேற்பட்ட இயற்கை உணவு வகைகள் ஆசிரிய, ஆசிரியைகளால் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இயற்கை உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இவ்விழா அமைந்தது. விழாவில் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த இயற்கை உணவுகளை மாணவ, மாணவிகள் வாங்கியதின் மூலம் ரூ.10 ஆயிரம் வசூலானது. அந்த தொகையை புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கபட்டது. இந்த தொகையை தாளாளர் முத்துகண்ணன் தலைமையில் திரைப்பட நடிகர் குட்டிமணி வழங்கினார். அத்துடன் தீபாவளி புத்தாடைகளும் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story