நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளரிடம் பணம் அபேஸ் புரோகிதர் கைது


நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளரிடம் பணம் அபேஸ்  புரோகிதர் கைது
x

நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளரின் வங்கி கணக்கில் பணத்தை அபேஸ் செய்த புரோகிதர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் விஜயா (வயது 50). சிதம்பரம் நடராஜர் கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது, தான் வைத்திருந்த வங்கி ஏ.டி.எம். கார்டை தவறவிட்டார். தவற விட்ட ஏ.டி.எம். கார்டில், அதற்கான ரகசிய எண்ணை எழுதி வைத்திருந்தார். இந்த ஏ.டி.எம். கார்டை எடுத்த மர்மநபர் ஒருவர், விஜயாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரத்தை எடுத்ததாக விஜயாவின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயா இதுபற்றி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வங்கி பணம் எடுத்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டபோது, சிதம்பரம் கிழக்கு புது தெருவை சோ்ந்த புரோகிதர் அமிர்தகடேஸ்வரன்(35) என்பவர் விஜயாவின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அமிர்தகடேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.


Next Story